கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது
கிளிநொச்சி-இரணைமடு 55 ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேர் கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(19.8.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிசார் குறித்த பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு சிலாபம், புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணம் மற்றும் சிறிய ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.