ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இணக்க அரசியலா! இனப்படுகொலையை நிரூபிக்க இப்படித்தான் செயற்பட வேண்டும்..
தற்போது தமிழர் பகுதியில் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இதுவரையில் 500ற்கும் மேற்பட்ட மனித எலும்புகூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை 'இனப்படுகொலை' (Genocide) மற்றும் 'மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்' என்று சர்வதேச அளவில் சட்டப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் செல்வின் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிட்ட அவர்,
இதற்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரித்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போன்ற அமைப்புகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் அனைத்து மக்களுக்கும் உள்ள 'வாழும் உரிமை' (Inherent right to life) என்ற அடிப்படை கோட்பாட்டின் அடிப்படையில் நீதிக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
நீதிக்கான பயணத்தில் இணக்க அரசியல் எந்தளவு தடையாக இருக்கிறது என்பதை உணர்ந்து, உரிமைகளுக்காக உறுதியான மற்றும் சட்ட ரீதியான அழுத்தங்களை சர்வதேச அளவில் பிரயோகிக்க வேண்டும்.
இனப்படுகொலை என்பதை சர்வதேச சட்டத்தின் கீழ் (International Law) நிரூபிப்பதற்குத் தேவையான வலுவான ஆவணங்கள் மற்றும் 'கட்டளைச் சங்கிலி' (Line of command) தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதில் சிரமங்கள் உள்ளன.
தமிழர்களின் விவகாரத்தில் கையாளப்படும் 'இணக்க அரசியல்' (Conciliatory politics) அல்லது சமரசப் போக்கானது, இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளை சர்வதேச அரங்கில் முன்வைப்பதற்கும், நீதியைப் பெறுவதற்கும் ஒரு பெரிய தடையாக உள்ளது என குறிப்பிட்டார்.
முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...
ரணிலின் பிரித்தானிய பயணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - மீண்டும் உறுதிப்படுத்திய வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம்