தன்னை விமர்சிப்பவர்கள் யார்? வெளிப்படுத்தினார் யாழ். மாநகர முதல்வர்
தன்னை காரணமின்றி விமர்சிப்பவர்கள் யாழ். நகரை சாக்கடையாக பேணுவதையே விரும்புவதாக யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் முதல்வராக பணியேற்க முன் இருந்தவர்கள் எந்தவிதமான அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்கவில்லை.
தற்போதைய கோவிட் சூழலிலும் மிக வேகமாக யாழ். நகரை அபிவிருத்தி செய்து வரும் நிலையில், எமது பணிகள் தொடர்பாக வரவேற்பு காணப்படும் நிலையில் முன்னர் இருந்தவர்களையும், எதுவும் மக்களுக்கு செய்யாதவர்களையும் மக்களிடமிருந்து எழுகின்ற அவர்கள் தொடர்பான விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளாதவர்களே என்னை விமர்சிக்கின்றனர்.
இவ்வளவு துரிதமாக அபிவிருத்தி பணிகள் இடம்பெறும் என்று எந்தவொரு கட்சிகளும் கற்பனை கூட பண்ணவில்லை. ஆறு மாதத்தில் இவ்வளவு அபிவிருத்தி பணிகள் இடம்பெறுவதை ஏற்றுக் கொள்ளாதவர்களே இவ்வாறு மோசமான காழ்ப்புணர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார்கள்.
இவ்வாறு பொய்களை கிளப்பிவிட்டால் நன்கொடையாளர்களை கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி பணிகளை குழப்பி யாழ். நகரை சாக்கடையாக தொடர்ந்தும் பேணுவதையே விரும்புகிறார்கள்.
என்னை மக்கள் ஆதரிக்க தொடங்கிய நிலையில் தமது ஆதரவு சரிந்து விடும் என்பவர்களே இவ்வாறு என்னை விமர்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam