யாழில் அலட்சியத்தால் இடம்பெற்ற விபத்து : ஐவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது இன்றையதினம்(10) நடைபெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியது.
பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.
இதில் ஐந்து பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் -கஜி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
