யாழ் சட்டத்தரணிகள் சங்க செயலாளரின் கடிதத்தினால் சர்ச்சை!

Jaffna Douglas Devananda Dr Wijeyadasa Rajapakshe M A Sumanthiran
By Theepan Jul 02, 2023 09:30 PM GMT
Report

யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் தனிப்பட்ட காரணங்களுக்காக மேலதிக நீதிவானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சங்கத்தின் சார்பில் எழுதிய கடிதத்தினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றினை காரணம் காட்டிய அந்தக் கடிதம், அமைச்சர்கள் விஜயதாஸ ராஜப்ச, டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டமை விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இக்கடிதம் யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினுடையது அல்ல என்று அதன் தலைவர் விளக்கக் கடிதம் ஒன்றை நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

பொலிஸாருக்கு வாக்குமூலம்

யாழ் சட்டத்தரணிகள் சங்க செயலாளரின் கடிதத்தினால் சர்ச்சை! | Jaffna Lowers Chairman Latter Crisis

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் உள்ளார். மோசடியாகத் தயாரிக்கப்பட்ட அற்றோனித் தத்துவ பத்திரம் ஒன்று தொடர்பில் சட்டத்தரணி எஸ்.செலஸ்ரின் அண்மையில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தபடுத்தபட்டார்.

அந்தப் பத்திரம் தனது எழுதுனரினால் தயாரிக்கப்பட்டது என்றும் தன்னிடம் ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

சட்டத்தரணி எஸ்.செலஸ்ரினின் வாக்குமூலத்துக்கு அமைய அவரது எழுதுனர் கைது செய்யப்பட்டு ஜூன் 24ஆம் திகதி யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஜூன் 26ஆம் திகதி யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தை கூட்டிய செயலாளர், சட்டத்தரணி எஸ்.செலஸ்ரின், யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு வழங்க வேண்டும் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இந்நிலையில் நிலுவையில் உள்ள வழக்குத் தொடர்பில் அவ்வாறு முறைப்பாடுகளை முன்வைக்க முடியாது, அது சட்டத்தரணிகள் சங்கத்தின் தார்மீகமும் கிடையாது என்று சட்டத்தரணிகள் உறுதியாகத் தெரிவித்தனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

யாழ் சட்டத்தரணிகள் சங்க செயலாளரின் கடிதத்தினால் சர்ச்சை! | Jaffna Lowers Chairman Latter Crisis

எனினும் மறுநாள் ஜூன் 27ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தலைப்பில் யாழ். சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் என்ற வகையில் அனுப்பப்படும் கடிதம் எனக் கூறி நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அதன் பிரதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் அந்த மன்றில் முன்னிலையாவதை புறக்கணிப்பார்கள் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் கடிதத் தலைப்பில் செயலாளர் மாத்திரம் கை ஒப்பமிட்டு அனுப்பிய இக்கடிதம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரிடம் கேட்டிருந்தது.

கடும் எதிர்ப்பு

யாழ் சட்டத்தரணிகள் சங்க செயலாளரின் கடிதத்தினால் சர்ச்சை! | Jaffna Lowers Chairman Latter Crisis

அத்துடன், நீதி சேவையுடன் தொடர்புடைய அலுவலர் ஒருவர் மீதான முறைப்பாட்டை முறையற்ற வகையில் அரசியல் தலைவர்களுக்கு அனுப்பியது தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் இந்தக் கடிதம் யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினுடையது அல்லது என்று அதன் தலைவர், மூத்த சட்டத்தரணி எஸ்.தவபாலன் விளக்கக் கடிதம் ஒன்றை நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

மேலும், யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் மாண்பை மீறி செயலாளர் தனிப்பட்ட காரணத்துக்காக பதவியை பயன்படுத்தியமை தொடர்பில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார்.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US