யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! ஐவர் அதிரடியாக கைது (Video)

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Theepan May 04, 2023 02:11 AM GMT
Report

ஐவர் கைது

யாழ்ப்பாணம்-தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விகாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று இரவு முதல் குறித்த பகுதிக்குள் வெளியாட்கள் எவரும் செல்ல முடியாதவாறு தடைகளை பொலிஸார் ஏற்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் எவ்வித குற்றசாட்டுக்களும் இன்றி பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆறாம் இணைப்பு

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (04.05.2023) அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரை பார்க்க சென்றவர்களில் இருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை பொலிஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

ஐந்தாம் இணைப்பு 

யாழ்.தையிட்டி பகுதியில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையில், சட்டத்தரணி சுகாஸிற்கும், பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் குடித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததையடுத்து அங்கு சட்டத்தரணிக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

‘‘குறித்த பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி சுகாஸ் அங்கு குடித்துவிட்டு இருப்பதாகவும்‘‘ குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான தகவல்களை இக்காணொளியில் காணலாம், 

நான்காம் இணைப்பு 

‘‘யாழ்.தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராகவும், விகாரையை சூழ இருக்கின்ற தமிழர்களின் காணிகளை இராணுவத்தினரும் பொலிஸாரும் சேர்ந்து ஆக்கிரமிப்பதற்கு எதிராகவும் ஜனநாயக முறைக்கு கீழ் முன்னெடுக்கப்பட்ட போராட்டதில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி ந.காண்டீபன் இருவரையும் பொலிஸார் தனிமைப்படுத்தி, சிறைப்பிடித்து வைத்திருப்பதாக‘‘ சட்டதரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்,  

மூன்றாம் இணைப்பு 

சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உட்பட பலருக்கு உணவு வழங்க பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! ஐவர் அதிரடியாக கைது (Video) | Jaffna Land Protest Srilanka Army

யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! ஐவர் அதிரடியாக கைது (Video) | Jaffna Land Protest Srilanka Army

இரண்டாம் இணைப்பு

யாழ்ப்பாணம் - வலிகாமம், வடக்கு தையிட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நள்ளிரவு தாண்டியும் அவர்களுக்கு தேவையான உணவு, நீர் என்பன இதுவரை வழங்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் போராட்ட பகுதிக்குள் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட்ட நால்வர் இருக்கும் பகுதிக்கு செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், மேலிடத்திலிருந்து தமக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தின் கட்டளை இதுவெனவும் தெரிவித்து குறித்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களை தடுக்க பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடமுற்பட்ட போது லத்தியினை காட்டி பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர். 

யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! ஐவர் அதிரடியாக கைது (Video) | Jaffna Land Protest Srilanka Army

யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! ஐவர் அதிரடியாக கைது (Video) | Jaffna Land Protest Srilanka Army

யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! ஐவர் அதிரடியாக கைது (Video) | Jaffna Land Protest Srilanka Army

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் - வலிகாமம், வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக யாழ்.தையிட்டி பகுதியில் பதற்றமான சூழல் நிவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் குறித்த பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் உள்நுழைய முடியாதவாறு பொலிஸார் வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடையேற்படுத்தியுள்ளனர்.

யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! ஐவர் அதிரடியாக கைது (Video) | Jaffna Land Protest Srilanka Army

பொலிஸார் குவிப்பு

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட சிலர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக போராட்ட பகுதிக்குள் இவர்கள் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த பகுதிக்கு சென்ற சட்டத்தரணி சுகாஸை போராட்ட பகுதிக்குள் நுழையவிடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து போராட்டப்பகுதியினை சுற்றி இராணுவத்தினர் முள் வேலிகளை அமைத்து வருகின்றமையினால் அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவு ஒன்றுக்கூடியுள்ளதுடன் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுவதாக  அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.




GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US