வட்டச் சந்தி அமைக்க மறந்து அழகிழந்து தனித்து நிற்கும் ஒரு மரம்
கொடிகாமம் - வரணி வீதியில் சுட்டிபுரம் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்னுள்ள மிருசுவில் வீதியின் வழியே மிருசுவில் நோக்கி பயணித்து மூன்றாவது கிலோமீற்றரில் வருகிறது அந்த மரம்.
A9 வீதியில் மிருசுவில் தபாலக சந்தியில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீதி வழியே பயணிக்கும் போது முதலாவது கிலோமீற்றர் தொலைவில் இருக்கிறது அந்த மரம்.
மூன்று வீதிகள் சந்தித்துக் கொள்ளும் அந்த வீதியின் நடுவே அந்த மரம் தனித்து தனியே நிற்கின்றது. பச்சைப் பசேலென பரவசப்படுத்தும் படி.
இராணுவ புலனாய்வாளர்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்: துப்பாக்கி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி
வட்டப்பாதை
அந்த மரத்தை மையமாக கொண்டு வட்டப்பாதையை அமைக்கும் போது அந்த வீதி மிகவும் அழகான தோற்றம் பெறும். மரத்தினை சூழ சீமெந்து சுவரை வட்டமாக அமைத்து அதனுள் மண்ணை நிரப்பி அதன் மீது புற்களை வளர்த்து நீரை தொடர்ந்து பாச்சி பச்சை பசேலாக காட்சி தோன்ற வைத்தால் பார்ப்போரை அது மிகவும் கவர்ந்து கொள்ளும்.
அதிக மக்கள் போக்குவரத்து இல்லாதது ஒன்று தான் இந்த இடத்தில் வட்டப்பாதை அமைக்கும் தேவையை கொண்டு வரவில்லை என குறிப்பிட்டார் ஒரு வயதான வழிப்போக்கர்.
அயலில் உள்ள வீட்டுக்களில் வசிப்போரும் வீதியை அழகாக்கும் வட்டப்பாதை அமைப்புக்கு பொருத்தமான பயணத்திருப்பங்களை இந்த சந்திப்பு கொண்டிருப்பதால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த சூழல் நல்லதொரு எழில்மயமான தோற்றப்பாட்டை பெறும் என தம் பெரு விருப்பை எடுத்துரைத்தனர்.
திட்டமிடல் இல்லாத அழகு
யாழில் வீதி அபிவிருத்தி பணிகளின் போது வீதியில் மக்களின் போக்குவரத்து தேவை மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டு திட்டமிடல்களை மேற்கொள்கின்றமையை அங்குள்ள வீதியமைப்பு பணிகளையும் பயன்பாட்டையும் அவதானிக்கும் போது இலகுவாக புரிந்த விடலாம் என புலம்பெயர் சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டு இந்த இடத்தினை எப்படியெல்லாம் அழகுபடுத்தி இருக்கலாம் என நீண்ட தன் விபரிப்பை வெளிப்படுத்தியமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பொதுவான வீதியமைப்பின் போது வீதிகளின் இயல்பான அழகை மெருகூட்டி மேம்படுத்தும் வகையில் பணிகளை முன்னெடுக்க திட்டமிடலாம் என்ற கருத்தினை பயணிகள் பலர் வெளிப்படுத்தி நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல வீதிகளில் பல மரங்கள் இறக்கின்றன
கடந்த காலங்களில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தி பணிகளின் போது வீதியின் நிழல் தரும் பயனுள்ள பல மரங்கள் அவ்வாறே இருக்குமாறு பேணப்பட்டமையை அவதானிக்கலாம்.
எனினும் அவை பின்னர் படிப்படியாக இறந்து விட்டமையும் அவதானிக்கப்பட்டதை குறிப்பிட்டாக வேண்டும். இதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு அடுத்து வந்த வீதியமைப்பு பணிகளில் பின்பற்றப்படவில்லை என்பதும் நோக்கப்பட வேண்டியது.
கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் உள்ள நிழல் தரும் மரங்களை பேணி மேற்கொள்ளப்பட்ட காபைட் வீதியமைப்பால் அந்த மரங்கள் இப்போது இறந்துவிட்டமையை அவதானிக்க வேண்டும்.
இந்த வட்டப்பாதை அமைப்பின் இது கருத்திலெடுக்கின்றமையால் இந்த அழகேற்றும் முயற்சி பயனுடையதாக இருக்கும் என்பதும் குறிப்பிட வேண்டியதொன்றாகும்.