ஊடகவியலாளர்கள் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்தப்படுவதை ஏற்கமுடியாது: டக்ளஸ் கண்டனம்
நாட்டில் இயல்பான சூழ்நிலை காணப்படும் இந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்றுசுத்தல்களும் விடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடகவியலாளரான தம்பித்துரை பிரதீபன் வீட்டின் மீது அண்மையில் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் தொடர்பில் கருத்து கூறும் பேதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த காலங்களில் நாட்டில் எத்தனை தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் கொலைகள் எல்லாம் நடந்திருந்தது என உங்களுக்கு தெரியும்.
தாக்குதல் சம்பவங்கள்
அன்று அதை செய்தவர்கள் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிற மாதிரியான போர்வையிலேயே அதை முன்னெடுத்திருந்தனர். குறிப்பாக ஊடகவியலாளர் மீது தங்களுடைய வஞ்சகத்தை தீர்த்துக் கொள்வது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அதன் பழியை ஈ.பி.டி.பி மீது இலகுவாக போட்டு தாம் தப்பித்துக்கொள்வதாக இருந்தது.
இதுதான் கடந்த காலங்களில் நடந்தது. அதேபோன்று தான் இன்றைக்கும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ஆனால் துரதிஸ்டவசமாகவோ அதிர்ஷ்டவசமாகவோ ஈ.பி.டிபியின் பெயர் இன்று அத்தகைய செயற்பாடுகளில் பயன்படுத்துவது இல்லாது போய்விட்டது.
அது உணர்வினுடைய வெளிப்பாடாகவோ அல்லது அந்த வன்முறைக்கு தலைமை தாங்கியவர்கள் இன்று அடியோடு இல்லாது போனமையோ இருக்கலாம்.
உயிர் அச்சுறுத்தல்கள்
கடந்த காலத்தில் வன்முறைக்கு தலைமை தாங்கியவர்கள் ஈ.பி.டிபினுடைய மாற்றுக் கொள்கை அல்லது மாற்று வேலைதிட்டத்தை விரும்பாததால் அல்லது தாங்கள் செய்வது அம்பலப்பட்டு போகும் என்பதை விரும்பாததால் ஈ.பி.டி.பியை ஏதோ ஒரு வகையில் அழிக்க முற்பட்டார்கள்.
குறிப்பாக, உயிர் அச்சுறுத்தல் மற்றும் உயிராபத்துகளையும் ஏற்படுத்தியது மட்டுல்லாமல் ஈ.பி.டி.பினுடைய நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை செய்தார்கள்.
அதைத்தான் நான் இந்த சந்தர்ப்பத்தில் சகோதரர் பிரதீபன் விடயத்திலும் கூறவிரும்புகின்றேன். அந்தவகையில் எல்லோரும் விழிப்பாக இருந்து உண்மை வெளிவருமானால் இவ்வாறான சம்பவங்களை நாங்கள் இல்லாமல் செய்யலாம் என்று நான் நம்புகின்றேன்” என கூறியுள்ளார்.
சீனக் கடலட்டைப் பண்ணை
மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்ற நல்லாட்சி அரசாங்கத்தில்
தான் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சீனக் கடலட்டைப் பண்ணை
ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது ஆட்சியில் அதை
அகற்றினோம் என தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கில் கடல் அட்டைப் பண்ணைகளால் சூழல் சமநிலை பாதிக்கப்படுவதாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடல் அட்டைப் பண்ணைகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்ற நல்லாட்சி அரசாங்கத்தில் அமைத்தார்கள் அப்போது சிறீதரனுக்கு தெரியாதா?
எமது ஆட்சியில் அந்தப் பண்ணையை முற்றாக அகற்றியுள்ள நிலையில் தனது அரசியல்
சுயலாபத்துக்காக வடக்கில் சீனர்களின் அட்டைப் பண்ண இருப்பதாக பொய் கூறி
வருகிறார் எனவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |