மட்டக்களப்பில் கிழக்கு ஆளுநரினால் கடைத்தொகுதி திறந்துவைப்பு
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்தில் வாழ்வாதாரத்தினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட கடைத்தொகுதி திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடைத்தொகுதியானது இன்று(15.06.2024) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதி ஒதுக்கீடு
கிழக்கு மாகாணத்தில் வறிய நிலையில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண ஆளுனரினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகிற நிலையில் இக் கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் செயலாளர் பற்குணம் தலைமையில் நடைபெற்ற இந்த
நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர்
வியாழேந்திரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
உலக வங்கியின் 12.5மில்லியன் ரூபா செலவில் இந்த கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர்களான சர்வானந்தா,கதிர்வேலு,ஏறாவூர் நகர் பிரதேசசபையின் செயலாளர் எம்.எம்.ஹமீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
