முடக்கப்படும் பலாலி விமான நிலையம் - அதிர்ச்சித் தகவல்கள்..!
இந்தியாவால் பல விடயங்கள் இலங்கைக்கு முன்மொழியப்பட்ட நிலையில் தற்போதைய அரசாங்கம் அதனை வெளிப்படையாக கூற ஆரம்பித்துள்ளதாக ஓய்வுநிலை சிரேஸ்ட நிர்வாக சேவை அதிகாரி இரேனியஸ் செல்வின் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்குமிடையில் பாலம் அமைக்க முடியாது என குறிப்பிட்டிருந்தார், அங்கொரு connectivity project இல்லாமல் போய்விட்டது.
அதனை தொடர்ந்து மற்றுமொரு அமைச்சர் , பலாலி விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.
இவ்வளவு காலமாக சர்வதேச விமானநிலைமாக பலாலி விமானநிலையத்தை தற்போது ஆய்வு செய்கின்றோம் என்று குறிப்பிடுகையிலே தெரிகின்றது, அதனை முடக்குவதற்காக வேலைகள் நடைபெறுகின்றது என்பது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...



