இலங்கையை உலுக்கிய மற்றுமொரு கோர விபத்து - கடும் இரவில் மக்களின் துணிகர செயல்
இலங்கையில் சம்பவித்த மற்றுமொரு கோர விபத்து காரணமாக நாட்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்ற சென்ற இருவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் நன்றி
அதிக இருள் சூழ்ந்த பகுதியில் மீட்பு குழுவினர் இன்றி போராடிய சந்தர்ப்பத்தில் அந்த பகுதி மக்கள் காப்பாற்ற முன்வந்ததற்கு பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 500 மீற்றர் வரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுக் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரவில் யாரால் சென்று காப்பாற்ற முடியும் என வினவிய போது பிரதேச மக்கள் நாங்கள் சென்று மீட்கிறோம் என தைரியமாக தெரிவித்துள்ளனர்.
மக்களின் மீட்பு நடவடிக்கை
அதற்கமைய, தோளில் கயிறுகளுடன் சென்று பல நேரம் போராடிய மக்கள் சடலங்களை தோளில் சுமந்துக் கொண்டு வந்துள்ளனர்.
மீட்பு குழுவினரே மீட்க முடியாமல் இருந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த அனைத்து விளக்குகள் கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில் மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பதுளை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றின் போது 30இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அந்த விபத்தின் போதும் அந்தப் பகுதி மக்களே அவர்களை மீட்கும் நடவடிக்கையில் போராடியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 19 மணி நேரம் முன்

உலகின் சக்திவாய்ந்த டாப் 10 பாஸ்போர்டுகள்: அமெரிக்கா, சீனா இல்லை.. முதலிடம் பிடித்த நாடு எது? News Lankasri

பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்: ஒரு வைரல் செய்தி News Lankasri
