யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் பயணித்த வாகனம் விபத்து! தெய்வாதீனமாக உயிர்தப்பிய அதிகாரிகள்
யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ். பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்தியில் இன்று இரவு 10 மணியளவில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிர்தப்பிய அதிகாரிகள்
இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.நகர் பகுதியிலிருந்து திருநெல்வேலி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்.இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கந்தர்மடம் பகுதியில் இருந்து யாழ்.நகர பகுதிக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் யாழ்.இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனத்தில் பயணித்த அதிகாரிகளும், மேற்படி காரில் பயணித்த சாரதியும் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் அவ்வீதி ஊடான போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின.
விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You may like this..





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
