யாழ். பல்கலைக்கழக சம்பவம் மிகவும் வேதனையளிக்கின்றது! பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் மிகவும் வேதனையளிப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியா வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் ஹகமட் இதனை தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி நேற்று இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது.
இதன் போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே, பிரித்தானியா வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் ஹகமட் குறித்த சம்பவம் தொடர்பில் தனது கவலையை தெரிவித்துள்ளார்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam