சர்வதேச மனக் கணித போட்டியில் யாழ்.மாணவன் முதலிடம்!
சர்வதேச மனக் கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த
விக்னேஸ்வரன் ருஷாந் முதலிடத்தை பெற்றுள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவரர்கள் பங்குபற்றிய போட்டியில் , இலங்கை சார்பில் கலந்துகொண்டதுடன் Champion பட்டத்தை பெற்ற ஒரே ஒருவர் என்பது பாராட்டுக்குரியது.
2023ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக் கணிதப் போட்டி இடம்பெற்றது.
மனக் கணித போட்டி
இந்த போட்டியில் உலகளாவிய ரீதியிலே 80 இற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 62 மாணவர்கள் இதில் பங்குபற்றினர்.
இதில் கிருபாகரன் தர்சானந், செந்தில்நாதன் சேசாளன், கஜேந்திரன் லவின், வானதி சிவநேசன் ஆகியோர் தத்தமது பிரிவுகளில் சர்வதேச ரீதியாக மூன்றாம் இடங்களை தமதாக்கிக் கொண்டனர்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
