யாழ் - பருத்தித்துறையில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகாமையில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த எலும்புக்கூடு இன்று(12.06.2025) மீட்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மனிதப் புதைகுழி அகழ்வு
மேலும், யாழ்ப்பாணம்(jaffna), செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 19 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கற்கோவளத்திலும் இவ்வாறு எலும்புக்கூடு மீட்க்கப்பட்டமை தொடர்பில் அச்சநிலை உருவாகியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam