கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்(Photos)
யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நினைவுக்கூறப்பட்டுள்ளது.
இந்த படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்காக சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1987 அக்டோபரில் இந்திய இராணுவத்திற்கும் - விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில், ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பல மக்கள் பாதுகாப்புக்கருதி கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்தார்கள்.

குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மாவீரர் துயிலுமில்லங்களுக்குள் நுழைய முடியாது: மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழு
இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்
1987 அக்டோபர் 24ம் திகதி காங்கேசன்துறை வீதி வழியாக யாழ். நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக் கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலை கட்டிடங்கள் மேல் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது உரிய முறைப்படி தகனம் செய்வதற்கான சூழ்நிலையில்லாததால் இறந்தவர்களின் சடலங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டமை நினைவூட்டத்தக்கது.

ரணில் அரசாங்கத்தால் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக பார்க்கப்படும் பூநகரி: சுட்டிக்காட்டும் சிறீதரன்





பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
