யாழில் பெய்துவரும் கனமழை: 435 குடும்பங்கள் நிர்க்கதி
யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 435 குடும்பங்களைச் சேர்ந்த 1523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சங்கானை பிரதேச செயலக பிரிவில் 214 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 485 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்காலிகமாக தங்க வைக்கப்பட்ட மக்கள்
அத்துடன் கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேரும், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் அன்னை முன்பள்ளி நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |