யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகம் மற்றும் பங்கீடு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது.
இந்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலாளர் க.மகேசன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த
லியனகே, இ.போ.சபையின் வட பிராந்திய முகாமையாளர் குணபாலச்செல்வன்,
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன வடபிராந்திய முகாமையாளர் சிவரதன் உட்பட பிரதேச செயலர்கள், கூட்டுறவுச்சங்க தலைவர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்
முகாமையாளர்கள் எனப் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.