சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகள் : வடக்கு மாகாண ஆளுநர் சீற்றம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோது மதுவரிதிணைக்கள உதவி பணிப்பாளரிடம் வடக்கு மாகாண ஆளுநர் சட்டவிரோத மதுபான சாலைகள் தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று(26.10.2023) இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு வினவியுள்ளார்.
சட்டவிரோத மதுபானசாலை
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “நீங்கள் இவ்வாறு சட்ட விரோத மதுபானசாலைகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு வருகின்ற வருமானத்தினை இழக்க செய்கின்றீர்கள்.
அத்தோடு அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இந்த கூட்டத்திற்கு கூட திணைக்களத்திற்கு பொறுப்பானவர் வருவதில்லை உதவி அத்தியட்சகர் தான் ஒவ்வொரு முறையும் இந்த கூட்டத்திற்கு வருகின்றார்.
எனவே சட்ட விரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். அடுத்த முறை நீங்கள் கூட்டத்திற்கு வரும்போது இவ்வளவு காலத்தில் எத்தனை சட்டவிரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்தி இருக்கிறீர்கள் என்ற விபரத்துடன் வரவேண்டும் ”என கோரி எச்சரித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
