இயற்கை விவசாயம் செய்வோரை ஊக்குவிக்கவேண்டும்: யாழ் மாவட்ட செயலாளர் கோரிக்கை
உணவுத் தேவைக்காக செயற்கை விவசாயம் தற்பொழுது நடைமுறையில் இருப்பினும் பாரம்பரியத்தையும் இணைத்து இயற்கை விவசாயம் செய்வோரை ஊக்குவிக்கவேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விவசாய குழுக்கூட்டத்தில் கலந்து கொண கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட செயலாளர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“நெற்பயிரில் ஏற்படும் கபில நிற தத்திகள் வெண்ணிற முதுகு தண்டு தத்திகளின் தாக்கத்திற்கு பிரதான காரணமாக காலவதியான மருந்துகள், அளவுக்கதிகமான உர விநியோகம் என்பனவே காணப்படுகின்றது.

துவாரகாவின் பெயரைப் பயன்படுத்தி 45 நிமிடங்களில் சேர்க்கப்பட்ட பணம்! அம்பலப்படுத்தப்பட்ட இரகசியம்(Video)
பாரம்பரிய விவசாய முறை
மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு நாங்கள் ஆதரவு வழங்கவேண்டும். இந்தியாவில் தென் மாநிலத்தில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது.
எமது நாட்டில் உணவுத்தேவை அதிகளவில் காணப்படுகின்றது. அதன் காரணமாக செயற்கை விவசாயத்தின் விளைச்சல் அடிப்படையில் அது முதன்மைபடுத்தப்படுகின்றது.
எமது பாரம்பரிய மாமரங்கள், மாம்பழ வகைகள் மறக்கப்பட்டு புதிய இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய விவசாய முறைகள் விளைச்சல்கள் குறைவாக இருந்தாலும் அவற்றை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
அமெரிக்காவில் செயற்கை பற்தூரிகைக்கு பதிலாக இயற்கை பற்தூரிகையாக வேப்பம் குச்சி விற்பனை செய்யப்படுகின்றது. நெடுந்திவீல் இன்றும் பாரம்பரிய தக்காளி இனம் பயிரிடப்படுகிறது.
வருடாந்த பயிர்ச்செய்கை
ஆகவே இவ்வாறான பாரம்பரிய விவசாய முறைமைகளை விவசாய பிரிவு வடக்கில் முன்னெடுக்கவேண்டும். மேலும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி என்பது நாடாளாவியரீதியில் அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும்.
ஆனால் வடமாகாணத்தில் இல்லை. ஆரம்பத்தில் கிளிநொச்சியில் இருந்தது இன்று இல்லை.
மேலும் பிரதேச சபை நகர சபை குப்பைகளை அகற்றவில்லை என நாம் கூறுகின்றோம். குப்பைகள் எம்முடையவை அதனை இயன்றவரை விவசாய உரமாக பயன்படுத்த முனைய வேண்டும்.
ஆகவே இலங்கையில் விவசாய திணைக்களம் யாழ் மாவட்டம் குறித்து பெரிதும் அக்கறைப்படாமைக்கான காரணம் எமது விவசாயிகள் பாரம்பரியமானவர்கள் வருடம் முழுவதும் ஏதாவது ஒரு செய்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் என்பதாகும்.
எமக்கென ஒரு வரலாறு உண்டு. இயற்கை விவசாயத்தினை ஊக்குவிப்பதன் மூலம் அது எமக்கு தன்னிறைவை தரும். என்றார்.

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு - கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உடற்கூற்று மாதிரிகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 5 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
