மகிந்தவின் அரசியல் சதி அம்பலம் - தலைமறைவான ஷிரந்தி - பின்னணி என்ன....!
இலங்கையில் அரசியலில் பலமிழந்துள்ள ராஜபக்ச குடும்பத்தினர் மீண்டும் மக்களின் செல்வாக்கினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மக்களின் அனுதாப அலைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நாமல் தலைமையிலான குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.
சமகால அரசியல் களத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை அநுர அரசாங்கம் நீக்கியமை தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
அரசியல் நாடகம்
இதனை சாதகமாக பயன்படுத்தி, தமக்கான மக்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் மகிந்தவின் வீட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பு அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு விஜேராம மாவத்தையில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் தங்கியுள்ள வீட்டில் நேற்று முன்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
சமகால அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதியாக மகிந்தவை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் ஊடக சந்திப்பை, ராஜபக்சவின் நெருங்கிய நம்பிக்கையாளரான திஸ்ஸ குட்டியாராச்சி மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஷிரந்தி ராஜபக்சவை அங்கு முன்னிலைப்படுத்தாமல் மகிந்தவை முன்னிலைப்படுத்தியிருந்தமை குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
நிதி மோசடி
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட தேரர் ஒருவர், நாமல் ராஜபக்ச நீண்ட காலம் ஜனாதிபதியாக பதவில் இருக்கவும் அதற்காக அவருக்கு பலத்தையும் மகத்தான சக்தியையும் கடவுள் கொடுக்க வேண்டும் என பிரார்த்தனை செய்திருந்தார்.
ஏற்கனவே நிதி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் மகிந்தவை மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலப்படுத்தும் வேளையில், மோசடி குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ள ஷிரந்தி மறைக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ராஜபக்ச குடும்பத்தில் சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச உட்பட பலர் நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உள்ளனர்.
அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மகிந்தவை பிரபலப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You may like this video..
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
