மகிந்தவின் உரிமைகளை மீட்க நாமல் புதிய பாதையில்!
முன்னாள் ஜனாதிபதிகளின் சட்டவிரோத சலுகைகளை நீக்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள ராஜபக்ச தரப்பு, வேறு வழிகளைத் தேடுவதாக அரசியல் தரப்புகளில் பேசுபொருளாகியுள்ளது.
இதன்படி நேற்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு சொகுசு மாளிகையை வழங்க பிக்குகள் குழு முன்வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், அவர்களில் எந்த பிக்குகள் குழு முன்னிலை வகித்தனர் என்பதை வெளிப்படுத்தாமல் நாமல் கவனமாக இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்வைக்கப்பட்ட சட்டமூலம்
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்துக்கு எதிரான சட்ட நடவடிக்கையில் இணைவதாக ரணில் விக்ரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் ஆரம்பத்தில் அறிவித்திருந்தனர்.
இந்த விடயத்தில் அவர்கள் தனித்தனியாக விவாதங்களை நடத்தியதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இருப்பினும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சட்டமூலத்தை எதிர்க்காததால், ராஜபக்ச மற்றும் அவரது குழுவின் திட்டங்கள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் கிராமத்திலிருந்து கிராமத்திற்கு திட்டத்தின் கீழ் பல பகுதிகளில் மக்கள் சந்திப்பை தற்போது ஏற்பாடு செய்து வருகிறது.
இதில் இன்றைய அரசாங்கத்தின் செய்பாடுகளை விமர்சிக்கும் முகமாக பல கருத்துக்களை வெளிப்படுத்திவருகிறது.
இவை இவ்வாறிருக்க ஷிரந்தி ராஜபக்ச தற்போது பொது வெளியில் வராமை குறித்து அரசியல் பார்வையாளர்கள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற மகிந்தவுடனான நிகழ்வில், வழக்கம் போல் மகிந்தவின் அருகில் ஷிரந்தி ராஜபகச இருக்கவில்லை என்றும், மகிந்தவுக்கு பாதுகாவலராக உள்ள உதவியாளர்கள் மட்டுமே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்திலும் நாமல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவருகிறது.
நீண்ட கால ஜனாதிபதியாக நாமலை நீடிக்க வைக்க இவ்வாறான திட்டமிடல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
இந்த பின்னணியில் மகிந்த அரசியல் களத்தில் நேரடியாக குதிக்காவிட்டாலும், ராஜபக்சர்களின் அரசியல் எதிர்காலத்திற்கான ஒரு நிலையான விம்பமாக பார்க்கப்படுகிரார்.
முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவித்து வந்த அனைத்து தேவையற்ற சலுகைகளையும் பொது நிதியிலிருந்து நீக்க நீதிமன்றம் செல்லும் அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்கொள்வதில் மகிந்த உள்ளிட்ட தரப்பினர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவது பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கான ஒரு நிகழ்ச்சி என்று சமூக ஊடகங்களில் மக்கள் அவர்களைக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா





Viral Video: உலகத்துல இப்படியொரு சிறிய டிசைனரை பார்த்திருக்கவே மாட்டீங்க... தங்கைக்கு வடிவமைத்தை ஆடையைப் பாருங்க Manithan

குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
