குறைந்த நேரத்தில் பல்லாயிரம் ரூபா சம்பாதிக்கும் வாய்ப்பு! இலங்கை பெண்களே உஷார்
வீட்டிலிருக்கும் பெண்கள் மற்றும் தாய்மார்களை குறிவைத்து இலங்கையில் நடக்கும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்பும் பெண்கள், தாய்மார்கள், தங்களுடைய ஓய்வு நேரங்களில் பணம் சம்பாதிக்க விரும்புவோரை இலக்கு வைத்து ஒரு குழுவினர் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
குறைந்த நேரத்தில் அதிகளவின் வருமானம்
இவ்வாறு வேலை தேடுவோருக்கு கவர்ச்சிகரமான சம்பளத் தொகையுடன், வேலை காத்திருப்பதாகவும், இரண்டு - மூன்று மணித்தியாலங்கள் உழைத்தாலே பல்லாயிரக் கணக்கான ரூபாவினை ஈட்டிக் கொள்ள முடியும் என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றது.
குறித்த விளம்பரங்களுக்கு, இலங்கையில் இருக்கக் கூடிய மிகப்பெரிய வர்த்தக நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் மையங்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, பிரபல நிறுவனங்களின் பெயர்களையும், கவர்ச்சிகரமான சம்பள விபரங்களையும் பார்த்தும் ஏமாற்றம் அடையும் சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது.
அந்த வேலைக்கு விண்ணப்பிக்க முயற்சித்தால், அந்த இணைப்பு வேறொரு தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
அதில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் கோரப்படலாம். குறித்த வேலையைப் பெற பணத்தொகையை வைப்பிலிடுமாறும் கோரப்படலாம்.
எனவே இவ்வாறான போலியான விளம்பரங்களை நம்பி உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையோ அல்லது பணத்தையோ முதலீடு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 14 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
