முடிவுக்கு வந்த ஏர் கனடா சேவை நிறுத்தம்!
கடந்த சனிக்கிழமை முதல் விமான பயணங்களை நிறுத்தி, ஆயிரக்கணக்கான பயணிகளை தவிக்க வைத்த ஏர் கனடா விமான நிறுவனத்துடனான பிரச்சினையை விமான ஊழியர்கள் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
விமான பணிப்பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தால் ஒரு தற்காலிக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கும் என்று விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைகள்
முன்னதாக, ஊதியம் மற்றும் திட்டமிடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளிநடப்புகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில் தற்போது செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கும் தொழில்துறைக்கும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும், இந்த ஒப்பந்தம் முழுமையாக வெளியிடப்படவில்லை.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மத்தியஸ்தரின் உதவியுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட ஒன்பது மணி நேரத்திற்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
