திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் - யாழ். மாவட்ட சர்வமத பேரவை காட்டம்

Sri Lankan Tamils Tamils Jaffna
By Theepan Oct 01, 2026 11:04 AM GMT
Report

ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது, எடுப்பார் கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின் மாண்புக்கு எதிரானதாகும் என யாழ். மாவட்ட சர்வமத பேரவை தெரிவித்துள்ளது.

நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் இருந்து தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில், சர்வமத பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

திலீபனை நாம் மதிப்புடன் குறிப்பிடுகிறோம்

குறித்த அறிக்கையில் மேலும், பேராசை, சர்வாதிகாரம், இனவாதம், மதவாதம் போன்றவை களையப்பட அகிம்சை ரீதியான முன்னெடுப்புகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற யாழ் மாவட்ட சர்வ மத பேரவை விரும்புகின்றது, உழைக்கின்றது. இந்த அடிப்படையில் வன்முறையை கடந்து வாழ்வை உறுதி செய்ய தனது உயிரை காணிக்கையாக்கிய திலீபனை நாம் மதிப்புடன் குறிப்பிடுகிறோம்.

அகிம்சைக்காக ஆகுதியான இவரை அவமதிப்புக்கு உள்ளாக்கும் அனைத்து சக்திகளையும் வலிமையாக கண்டிக்கிறோம். வரையறைகளை புரிந்து, கட்டமைப்புகளை அறிந்து, பன்மைத்துவத்தை மதித்து, அனைவரும் அனைத்து உரிமைகளுடனும் அவரவது வரலாற்று அடையாளத்துடனும் வாழ தடுப்பது மாண்பை நிராகரிப்பதாகும். அது ஆரோக்கியமானதல்ல.

அத்துடன் மாண்பு, சமத்துவம் ஒற்றுமை போற்றவற்றை வலியுறுத்தும் மக்கள் அரசியலை இருட்டடிப்பு செய்யும் கட்சி அரசியலை அதன் வரையறைக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என அனைத்து கட்சிகளுக்கும் ஒரு வேண்டுகோளை விடுக்கிறோம். சமய நோக்கைக் கடந்து, நினைவேந்தல் ஒரு மனித உரிமை என்பது இற்றைப்படுத்தப்பட்ட உண்மை.

திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் - யாழ். மாவட்ட சர்வமத பேரவை காட்டம் | Jaffna District Inter Religious Council

சர்வதேச உடன்படிக்கை

நினைவுகூரும் உரிமை என்பது, கலாசார வாழ்வில் பங்கேற்பதற்கான உரிமையை அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கும் 'பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் 15ஆவது பிரிவில் வேரூன்றியுள்ளது. ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது, எடுப்பார் கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின் மாண்புக்கு எதிரானதாகும்.

வாழ்வை உறுதி செய்ய ஒரு விடுதலைப்போராட்டம் அகிம்சை ரீதியாக முன்னெடுக்கப்பட்டது எமது யாழ் மண்ணின் வரலாறு. அந்த வரலாற்றின் ஒரு முக்கிய ஆளுமையான அகிம்சைவாதி திலீபன் அவர்களுக்கு அவமானம் ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளை களையும் அனைத்து தரப்பும் கைவிட்டு, சாதாரண மக்கள் நினைவேந்தல் நடைபெற உரிய ஒத்துழைப்பை அனைவரும் ஆரோக்கியமான முறையில் வழங்க அனைவரிடமும் வேண்டுகிறோம் என்றுள்ளது.

பணத்தை வைப்பிலிட்டு ஏமாற வேண்டாம்..! இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

பணத்தை வைப்பிலிட்டு ஏமாற வேண்டாம்..! இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

இணையம் வழியாக அவசர கடன் பெறுபவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இணையம் வழியாக அவசர கடன் பெறுபவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US