யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமை: அரச அதிபருடன் சி.வி.கே. கலந்துரையாடல்
வடக்கு மாகாண அவைத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி.வி.கே. சிவஞானம், யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(12) பிற்பகல் 2 மணிக்கு யாழ். மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அரச அதிபருடன் சிவஞானம் கலந்துரையாடினார்.
கழிவகற்றல் செயற்பாடு
கல்லுண்டாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற கழிவகற்றல் செயற்பாடு தொடர்பாகவும், செம்மணியில் ஏற்கனவே உப்பளம் இருந்த இடத்தில் கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ளும் போது சாத்தியப்பாட்டு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுதல், யாழ்ப்பாணத்துக்கான கழிவு முகாமைத்துவம் மற்றும் பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான குடிதண்ணீரைக் கொண்டு வருதல் தொடர்பாகவும் அரச அதிபருடன் சிவஞானம் கலந்துரையாடினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
