யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
யாழ்ப்பாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுக்கூடங்களில் 643 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போதே 7 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டது.
இதில், திருநெல்வேலி பாரதிபுரம் கிராமத்தில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த
இருவருக்கும் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam