யாழில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு
விபத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்றையதினம்(16) உயிரிழந்துள்ளார்.
முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி விஸ்வலிங்கம் (வயது 74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முதியவர் உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 14ஆம் திகதி மாஞ்சோலை வைத்தியசாலையில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இதன்போது முள்ளியவளை நித்தியானந்தா கல்லூரிக்கு அருகாமையில் இவர் வலது பக்கமாக துவிச்சக்கர வண்டியை திருப்ப முற்பட்டவேளை பின்னால் இருந்து வந்த மகேந்திரா வாகனம் இவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
பின்னர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (15) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.





ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
