யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குழப்பநிலை.. பின்னணியில் எம்பிக்களின் தனிப்பட்ட உதவியாளர்களா!
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் நடுப்பகுதிக்கு பின்னர் அர்ச்சுனாவின் விரும்பத்தகாத செய்ற்பாடுகளால் அவ்வப்போது கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்நிலையில் தையிட்டி திஸ் விகாரை விவகாரமானது சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
தொடர்ச்சியான கூச்சல்
அதன்போது பின்னாள் இருந்த எம்.பிக்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் சிலர் கூட்டத்தில் உரத்து சத்தமிட தொடங்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி, குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் பேசுமாறும், மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளிக்குமாறு தொடர்ச்சியாக கூச்சலிட்டுள்ளனர்.
அதையும் மீறி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்ட சிலர் தையிட்டி விவகாரம் தொடர்பாக கருத்துரைத்தவாறு இருந்துள்ளனர்.
இந்நிலையில், பின்னால் இருந்து கூச்சலிட்டவர்களுடன் சேர்ந்த சிலர் கூட்டத்தை இடையில் குழப்பியதை அவதானிக்க முடிந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.





திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam