யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியமை அவமதிப்பு செயல்: தமிழரசுக் கட்சி ஆதங்கம்

Sri Lankan Tamils Jaffna India
By Theepan Jan 23, 2025 08:46 AM GMT
Report

யாழ். கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்ற விவகாரத்தில், , இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான "யாழ்ப்பாணம்" என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும் என  தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் இந்திய துணை தூதுவர் சாய்முரளியைச் சந்தித்து  சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நாடாளுமன்றிக்கு சிக்கலாக மாறியுள்ள அர்ச்சுனாவின் சிறப்புரிமை!

நாடாளுமன்றிக்கு சிக்கலாக மாறியுள்ள அர்ச்சுனாவின் சிறப்புரிமை!

அரசியல் காரணங்கள்

“யாழ். பொது நூலகத்துக்கு அருகாமையில் திறந்தவெளி அரங்கு அமைந்திருந்த யாழ்ப்பாண மாநகர சபைக்கு உரித்தான காணியில் அதற்குப் பதிலாக இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட "யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்" 2023 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் கௌரவ நரேந்திர மோடி மற்றும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் இணைந்து திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியமை அவமதிப்பு செயல்: தமிழரசுக் கட்சி ஆதங்கம் | Jaffna Cultural Centre Renamed

இந்த நிறுவனத்தின் நிர்வாகம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாநகர சபையின் நிதி வசதியீனத்தைக் காரணம் காட்டி அவ் வாறு செய்யப்படாமல் சில முக்கிய அரசியல் காரணங்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்தக் கட்டடம் அதன் முழுமையான அம்சங்கள் ஆராயப்படாமல் நிர்மாணிக்கப்பட்டமையே இந்த நிலை உருவாக காரணமாகியது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சகலரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இவ்வாறிருக்கையில் கடந்த 18.01.2025 ஆம் திகதி சனிக்கிழமை இதன் பெயர் "திருவள்ளுவர் கலாசார மையம்" என மாற்றப்பட்டதாக இலங்கையின் பிரதி கலாசார அமைச்சரும், இலங்கைக்கான இந்திய தூதுவரும் வேறு சிலரும் கலந்துகொண்ட சந்திப்பில் அதற்கான பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகச் செய்திகள் தெரிவித்திருந்தன.

இந்த நடவடிக்கை பற்றிய அறிதல் எதுவும் இந்த மண்ணின் அரசியல் தலைவர்களுக்கோ பிரதிநிதிகளுக்கோ சிறிதளவேனும் தெரிந்திருக்கவில்லை என்பது எமக்கு மிகவும் ஆச்சரியத்தையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மிகுந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு விரைவில்.. பிரதமர் உறுதி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு விரைவில்.. பிரதமர் உறுதி

ஆழமான அதிருப்தி

இந்த நடவடிக்கை பற்றிய ஆழமான அதிருப்தி உள்ளது என்பதை மட்டும் குறிப்பிட்டு, இது ஒரு இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமிடையேயான உணர்வுபூர்வமான விடயம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதனால் விபரமாக அதிருப்தியை பதிவு செய்வதை தவிர்க்கிறோம். தெய்வப் புலவர் ஐயன் திருவள்ளுவருக்கு நாமாகவே இந்த மண்ணில் பல இடங்களில் உருவச்சிலைகள் அமைத்திருக்கிறோம்.

யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியமை அவமதிப்பு செயல்: தமிழரசுக் கட்சி ஆதங்கம் | Jaffna Cultural Centre Renamed

அதுமட்டுமல்ல ஔவைக்கும், மாகாத்மா காந்திக்கும், பாரதிக்கும் நாமாக இங்கு சிலை எடுத்தவர்கள் நாங்கள். தெய் வப் புலவர் திருவள்ளுவருக்கு நாம் எதிரானவர்கள் அல்ல.

இப்படியிருக்கையில் இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான "யாழ்ப்பாணம்" என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும்.

இது இந்தியாவுக்கும் எமக்குமிடையேயான நல்லுறவில் ஆழமான குழி யாக அமைந்து விடக்கூடாது என நாம் திடமாக நம்புகிறோம்.

"யாழ்ப்பாணம்" என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம். இனத்தின் அடையாளம் ஆகும்.

எனவே இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக் கொள் கிறோம். மேலும் இந்த புதிய பெயர் மாற்றத்திற்கான அறிவித்தலில் கூட தமிழ்மொழி மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

என்னை சுட்டு வீழ்த்துங்கள்! சபையில் அர்ச்சுனா எம்.பி இன்றும் ஆவேசப் பேச்சு

என்னை சுட்டு வீழ்த்துங்கள்! சபையில் அர்ச்சுனா எம்.பி இன்றும் ஆவேசப் பேச்சு

16 ஆவது இலக்க திருத்தம்

இலங்கை அரசின் அரசமைப்பின் 16 ஆவது இலக்க திருத்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியே நிர்வாக மொழியாகும்.

யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியமை அவமதிப்பு செயல்: தமிழரசுக் கட்சி ஆதங்கம் | Jaffna Cultural Centre Renamed

சிங்களம் அடுத்த நிர்வாக மொழியாகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்பது அரசியலமைப்பின் ஏற்படாக இருக்கையில் சிங்கள மொழியில் முதலாவதாகவும் ஆங்கில மொழியில் இரண்டாவதாகவும் தமிழ் மொழியில் மூன்றாவதாகவும் பெயர்ப் பலகை எழுதப்பட்டிருப்பது இந்த ஏற்பாடுகளை மீறும் செயலாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்பே நல்லுறவைப் பாதிப்பின்றி பேணும் பொருட்டு இந்த மீளாய்வுக் கோரிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றது. என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றாம்" என்றுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US