யாழில் தவறான முடிவெடுத்து இருவர் பலி! பொலிஸார் தீவிர விசாரணை
யாழ். நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரும் , நகைக்கடையில் பணி புரியும் பெண்ணொருவரும் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின்னே உயிரிழப்புக்கான காரணம் தெரிய வருமென யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த வர்த்தக நிறுவனத்தில் கடமை புரியும் 21 வயது யுவதி இன்று காலை தூக்கிட்டு உயிரைமாய்த்துள்ளார். நாவாந்துறையில் உள்ள அவரது இல்லத்திலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் கொட்டடியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலதிக செய்தி: தீபன்
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 22 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam