யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்குக் கொரோனாத் தொற்று!
யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கும், முல்லைத்தீவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 406 பேரின் மாதிரிகள் நேற்று திங்கட்கிழமை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 9 பேருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் 7 பேரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" - என்றார்.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam