யாழ்ப்பாணம் - சென்னை விமானத்தில் பயணிக்க காத்திருக்கும் பெருமளவு பயணிகள்
யாழ்ப்பாணம் - சென்னைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் விமானத்தில் பயணிக்க பெருமளவு பயணிகள் காத்திருப்பதாக யாழ்.சர்வதேச விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர் லக்ஷ்மன் வன்சேகர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை கடந்த 12 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு எட்டு நாட்களில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானத்தில் 60 பயணிகள் பயணித்துள்ளதாகவும், 48 பயணிகள் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான அலையன்ஸ் எயார் ATR-72 ரக விமானத்தில் 60 பயணிகள் அமரக்கூடிய வசதி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
