யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழந்த சம்பவம்: குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை
வட்டுக்கோட்டை பொலிஸாரால் சித்திரவதைக்குள்ளான நிலையில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி யாழ். பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சித்திரவதைக்குள்ளான மற்றைய இளைஞனை சட்டத்தரணிகளின் துணையுடன் கூட்டிச் சென்று உயிரிழந்த இளைஞனை பொலிஸார் சித்திரவதைக்குள்ளாக்கிய இடங்களில் விஞ்ஞான ரீதியான தடயவியல் சோதனைகளை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை
இதன்படி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினர் இன்றையதினம் (28.11.2023) சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது உயிரிழந்த இளைஞனுடன் உடனிருந்த மூன்றாவது சாட்சியான மற்றைய இளைஞன், சித்திரவதைக்கு உட்படுத்திய பொலிஸ் நிலையத்திற்குள் உள்ள இடங்களை காண்பித்தார்.
இவற்றினை பார்வையிட்டு பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
