பொது நிறுவனங்களாக்கப்படும் இலங்கை அரச ஊடகங்கள்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்பன பொது நிறுவனங்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்விரண்டு கூட்டுத்தாபனங்களும் தொடர்ந்து நட்டத்தை ஈட்டுவதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு சார் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரியிலிருந்து நிதி
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கிவரும் இந்த அலைவரிசைகளுக்கு திறைசேரியிலிருந்து மேலும் நிதியை வழங்குவது கடினம்.
எனவே, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவற்றை பொது நிறுவனங்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது என வெகுசன ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



