யாழ். மாவட்டத்தை சேர்ந்த சுமார் 1600 தமிழ் இளைஞர்கள் தொடர்பில் இராணுவத் தளபதி தெரிவித்துள்ள விடயம்
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இலங்கை இராணுவத்தில் சேர்ந்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண படைத்தலைமையகத்தில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பிரிவினைவாதத்துக்கு ஆதரவாக மக்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதை இன்னும் காணக்கூடியதாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் சேர முன்வந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகும் என்று சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கோவிட் தொற்றின்போது பொது மக்களுக்கு தேவையான தனிமைப்படுத்தல் வசதிகளை
வழங்குவதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள்
செய்த சேவையையும் இராணுவ தளபதி இதன்போது பாராட்டியுள்ளார்.