யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் சிரமதான நடவடிக்கைகள்
யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடைகளும் அங்காங்கே வைக்கப்பட்டது.
பலர் பங்கேற்பு
ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அருள்ராஜ் ,வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரண ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள், கடற்படையினர், சுகாதார உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
