யாழில் கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி
யாழ். கோண்டாவில் - காரைக்காலை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இணுவில் கிழக்கு தொடருந்து கடவை பகுதியில் ஏற்பட்ட குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததோடு ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (14.02.2024) மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் வானில் பயணித்த வேளை, இணுவில் கிழக்கு புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது, புகையிரதத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான மூவரில் கணவன் மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு மனைவி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
