சிங்கள அமைச்சர் சாணக்கியனை வழிநடத்தினார்! சிவில் சமூக செயற்பாட்டாளர்
கறுப்பு சுதந்திரதின போராட்டத்தின் போது சிங்கள அமைச்சர் சாணக்கியனை வழிநடத்தியதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவக்குமார் தெரிவித்துள்ளார்.
எமது செய்தி பிரிவிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இதனை கூறினார். மேலும் கூறுகையில்,
நாட்டின் சுதந்திர தினத்தை, கறுப்பு சுதந்திரதினமாக அனுஷ்டிக்க தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளாலும் பல்கலைக்கழக மாணவர்களாலும் போராட்டம் ஒன்று ஆயத்தமாக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பு அனைத்து தமிழர் தரப்பினரிற்கும் விடுக்கப்பட்டது.
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அமலி அம்மா துரதிஷ்டவசமாக அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக வேலன் சுவாமிகள் கறுப்பு சுதந்திரதின போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சில பிரதேசவாதங்களை பேசியதை காண கூடியதாக இருந்தது என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறிய விடயங்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
