முன் ஜென்ம பாவத்தினால் மரண தண்டனைக்கு உள்ளான பூஜித
எந்தவொரு தவறும் செய்யாத போதும், முன்ஜென்மத்தில் செய்த தவறுக்காக தற்போது தண்டடை கிடைத்துள்ளதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், நிரந்த மேல் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் அவரின் கருத்தினை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டு எந்தவொரு காரியத்தையும் செய்யவில்லை. பொலிஸ் சேவையில் இணைந்த நாளிலிருந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.
மிகுந்த வேதனை
பல அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றியதாக குறிப்பிட்டார்.

பொறுப்புகூற வேண்டிய சிலரை விடுவித்தமைக்கான அந்த சந்தர்ப்பங்களின் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அடிப்படை உரிமை வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் மூலம் எனக்கும் மனைவிக்கும் எனது பிள்ளைகளுக்கும் மிகப்பெரிய மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
நான் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது பொலிஸ் அதிகாரிக்கோ ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் இழைக்கவில்லை.
முன்ஜென்ம வினை
நான் பின்பற்றும் பௌத்த தர்மத்தின்படி இதனை எனது முன்ஜென்ம வினையின் பயன் என்றே கருதுகிறேன்.

வழக்கு தீர்ப்பினை பரிசீலிக்குமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன். பொலிஸ் மா அதிபராகச் சேவையாற்றிய என்னை மட்டும் இவ்வாறு நடத்துவது குறித்து மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என நீதிமன்றத்தில் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri