யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் விபத்து: இருவர் படுகாயம் (VIDEO)
யாழ்ப்பாணம் - தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேருந்து மோதியதில் பாடசாலை மாணவியும், அவரது தந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி சந்தியில் இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர்களே சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் விபத்துடன் தொடர்புடைய பேருந்து இலக்கத்தகடு இல்லாத நிலையில் காணப்பட்டதாகவும், அது பாவனைக்கு உதவாத பேருந்து எனவும் விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடிகரான பிறகு தனது கண்டக்டர் நண்பர்களை சந்தித்த ரஜினி! அப்போது எடுக்கப்பட்ட அரிதான போட்டோவை பார்த்துள்ளீர்களா Cineulagam

டான் பட கதாநாயகி பிரியங்கா மோகனா இது ! சினிமாவிற்கு வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க Cineulagam

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri
