யாழ்ப்பாணம் - வல்வைப்படுகொலைகளின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (Video)
இந்திய இராணுவத்தினால் 63 தமிழ் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (02.08.2023) வல்வெட்டித்துறையில்அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தினால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர்.
இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி, அக வணக்தத்துடன் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் படுகொலை செய்யப்பட்டவர்களது உறவுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் முக்கியஸ்தர் காண்டீபன், கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






நல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா





நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தல் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
