பஹ்ரைன் செல்ல நீதிமன்ற அனுமதிக்கோரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ்
மோசடி வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர் வழக்கு தொடர்பில், இலங்கையில் பிறந்த பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் புதுடில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், இன்று ஆஜரானார்.
200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கு தொடர்பாக நடிகையிடம், இந்திய அமுலாக்க இயக்குனரகம், தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜாக்குலின் 2022, டிசம்பர் 23, முதல் பஹ்ரைன் செல்ல அனுமதி கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
நீதிமன்றம், இந்த கோரிக்கை தொடர்பில் அமுலாக்கல் இயக்குனரகத்தின் பதிலை, டிசம்பர் 22இல் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
பணமோசடி வழக்கு
2022, ஆகஸ்ட் 17 அன்று, 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில், அமுலாக்கல் இயக்குனரகம், துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிகையில், ஜாக்குலின் குற்றவாளியாக பெயரிடப்பட்டார். சுகேஷ் கொடுத்த பல கோடி ரூபாய் பரிசுகளை மனமுவந்து ஏற்று இலங்கையில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டதற்காக நடிகை மீது குற்றம் சாட்டப்பட்டது.சுகேஷ் சந்திரசேகர் பல பிரபலங்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சுகேஷ் மற்றும் அவரது மனைவி லீனா மரியா போல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. ஜாக்குலின் சுகேஷுடன் காதல் உறவைக் கொண்டிருந்தார் என்றும், இதன்போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் அன்பின் அடையாளமே தவிர மோசடியின் வருமானம் அல்ல என்றும் நீதிமன்றில் ஜாக்குலின் தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை நடிகை ஜாக்குலின், சில ஊடக நிறுவனங்கள் தனது நற்பெயருக்கு களங்கம்
விளைவிப்பதாகவும், தொழில்துறையில் தனது பணி வாய்ப்புகளை கெடுத்ததாகவும்
குற்றம் சாட்டியுள்ளார்.





ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
