பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வருமாறு ஜெக்குலின் பெர்னாண்டஸுக்கு அறிவித்தல்
இந்திய தொழிலதிபரை மிரட்டி 200 கோடி பறித்தமை தொடர்பான வழக்கின் விசாரணைக்காக, இலங்கை வம்சாவளி நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸுக்கு புதுடில்லி பொலிஸாரால் மீண்டும் அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இன்று முற்பகல் 11 மணிக்கு டில்லியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வருமாறு அதில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

8 மணிநேர விசாரணை
ஜெக்குலின் பெர்னாண்டஸிடம் கடந்த புதன்கிழமை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

பல கோடி ரூபாய் பணமோசடி வழக்கில், ஜெக்குலினின் பங்கு மற்றும்
குற்றவாளியிடமிருந்து அவர் பெற்ற பரிசுகள் குறித்து விசாரிக்கப்பட்டதாக
பொலிஸ் சிறப்பு ஆணையர் ரவீந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam