ஜெக்ஸன் அந்தனியின் மகள் கைது
பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்த தின விருந்தில் கலந்துகொண்டமை காரணமாகப் பிரபல பல்துறை கலைஞர் ஜெக்ஸன் அந்தனியின் புதல்வி, மாதவி அந்தனி கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதவி அந்தனியின் கணவர், நடிகை அனார்கலி ஆகர்ஷா, அவரது தாய் ஆகியோரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
இந்த பிறந்த நாள் விருந்தில் கலந்துகொண்ட நடிகை பியூமி ஹன்சமாலி உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் பண்டாரவளை பிரதேசத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே இந்த பிறந்த நாள் விருந்து நடைபெற்ற ஷெங்கிரீலா ஹொட்டலின் சமையல் கலை நிபுணருக்கும் கோவிட் வைரஸ் தொற்றியுள்ளதாகத் தெரியவருகிறது.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri