இரண்டாவது முறையாக ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார் செப்டேகி
பரிஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உகாண்டாவின் ஜோசுவா செப்டேகி ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
உகாண்டாவின் ஜோசுவா செப்டேகி ஒலிம்பிக்கில் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார் (26:43.14).
எத்தியோப்பியாவின் பெரிஹு அரேகாவி வெள்ளிப்பதக்கத்தையும், (26:43.44), அமெரிக்காவின் கிராண்ட் ஃபிஷர் வெண்கல பதக்கத்தையும் (26:43.46) கைப்பற்றினர்.
தருஷி கருணாரத்ன
இந்நிலையில், பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
அவர் போட்டி தூரத்தை 2 நிமிடங்களும் 7 செக்கன்களிலும் நிறைவு செய்துள்ளார்.
எனினும் ஒலிம்பிக்கில் பின்பற்றப்படும் ரிபெஜேஜ் (repechage) முறைமைக்கு அமைய, தருஷி கருணாரத்னவுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இதன்படி, அவர் இன்று பிற்பகல் 2.40 அளவில் இடம்பெறவுள்ள மற்றுமொரு போட்டியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |