கொழும்பின் இந்திய விசா விண்ணப்ப மையம் நாளை மீண்டும் திறக்கப்படும்
தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பின் இந்திய விசா விண்ணப்ப மையம், நாளை திங்கட்கிழமை (20.02.2023) மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விசா மற்றும் பிற சேவைகளுக்கான விசா விண்ணப்ப மையம் திங்கள்கிழமை முதல் வழமையாக இயங்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
பெப்ரவரி 15 ஆம் திகதியன்று இரவு எழுந்த பாதுகாப்பு சிக்கல் காரணமாக, இந்திய விசா விண்ணப்ப மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சிக்கல் காரணம்
இதன் விளைவாக, அனைத்து வீசா விண்ணப்பதாரர்களும் ஐவிஎஸ் பிரைவேட் லிமிடெட் உடனான தங்கள் நியமனங்களை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அத்துடன் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அலுவலகத்தை எந்த அவசர
தூதரக அல்லது விசா தொடர்பான விடயத்திற்கும் தொடர்பு கொள்ளுமாறும்
கேட்கப்பட்டிருந்தனர்.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri
