சி.ஐ.டியினரின் விசாரணையில் சிக்கியுள்ள பல அரசியல்வாதிகள்
இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் குற்ற புலனாய்வு திணைக்களத்தின் சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் பல்வேறு குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை வலுப்படுத்த 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திணைக்கள அதிகாரிகள்
இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்படும் அதிகாரிகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நியமிக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் 24 மணித்தியாளங்கள் பணியாற்றினால் விசாரணைகளை முடிக்க முடியவில்லை.
இதனால் டிசம்பர் மாதத்திற்குள் 5000 அதிகாரிகளையும் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு மேலும் 5000 அதிகாரிகளையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகள் தற்போது 17 மணித்தியாளங்கள் வரை பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சிறிய ஓய்வு தேவைப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




