சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவின் நிலைப்பாடு: வெளியான தமிழரசுக் கட்சியின் அறிக்கை
வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது தொடர்பான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவரால் நேற்றையதினம் (12.09.2024) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
வவுனியாவில் எடுக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்சியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு எடுக்கப்பட்டது
அத்துடன், சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைக் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகள் குறித்து அவருடன் பேசித் தீர்மானிப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் கூடும் தேர்தல் தொடர்பான குழு, மேற்படி விடயங்கள் குறித்து முன்னேற்ற மீளாய்வைச் செய்து அது பற்றி மக்களுக்கு அறிவிக்கும் என்றும் ப.சத்தியலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 8 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan