தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் சிறீதரன் வெளியிட்ட தகவல்
தேசியப் பட்டியல் மூலம் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்திருக்கின்ற ஆசனம் தொடர்பில் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று (17.11.2024) அல்லது நாளை, உயர்மட்டக் குழுவாக ஆராய்ந்து முடிவெடுக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தனது வெற்றி குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“வலிமை மிகு வாக்குகளால் எனக்கு ஆணை வழங்கிய மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி. உரத்தோடும் உறுதியோடும் எனது தமிழ்த் தேசியப் பயணம் தொடரும்.
தமிழ்த் தேசியப் பயணம்
திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலைகளின் உள்ளிருந்தவாறே தமிழ்த் தேசியத்தின் இருப்புக்காகப் போராடத் தலைப்பட்ட என்னையும், எனது பாதையையும் ஏற்று வலிமை மிகு வாக்குகளால் ஆணை வழங்கிய மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி.
உரத்தோடும் உறுதியோடும் எனது தமிழ்த் தேசியப் பயணம் தொடரும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்” என்றார்.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
